8 பில்லியன் டாலர் வர்த்தக இலக்குடன் பிளிப்கார்ட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் 2015ஆம் ஆண்டில் 8 பில்லியன் டாலர் அளவு வர்த்தகத்தை எட்ட வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அதுமட்டும் அல்லாமல் அடுத்த இரண்டு வருடத்திற்குள் 1 பில்லியன் பொருட்களை (100 கோடி பொருட்கள்) இத்தளத்தில் விற்க வேண்டும் என இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து

இந்நிறுவனத்தின் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் மற்றும் இந்நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஆடை விற்பனை நிறுவனமான மின்திரா நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால் அகியோ பெங்களுரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசுகையில் இந்நிறுவனத்தின் தலைவர்கள் நிறுவனத்தின் இலக்குகளை விவரித்தனர்.

3 பில்லியன் டாலர் வர்த்தகம்

3 பில்லியன் டாலர் வர்த்தகம்

மேலும் 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தக அளவு 3 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் 2015ஆம்ஆண்டில் 8 பில்லியன் டாலர் வர்த்தக அளவை எட்ட திட்டமிட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

இலக்குகள்
 

இலக்குகள்

பிளிப்கார்ட் நிறுவனம் 8 பில்லியன் டாலர் இலக்கை அடைய தோராயமாக மாதத்திற்கு 25 மில்லியன் பொருட்களை விற்க வேண்டும், மேலும் 2015ஆம் ஆண்டில் புதிதாக 1 இலட்ச விற்பனையாளர்களை நிறுவனத்துடன் இணைக்க வேண்டும் என பின்னி பன்சால் தெரிவித்தார்.

முதலீடு

முதலீடு

மேலும் இந்நிறுவனம் இதுவரை 2 பில்லியன் டாலர் அளவு முதலீட்டை பெற்றுள்ளது, இதனை கொண்டு இந்நிறுவனம் வேகமாக நிறுவனத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் மூலம் ஸ்னாப்டீல் மற்றும் அமேசான் நிறுவனத்துடன் போட்டிப்போட தயாராகி வருகிறது.

பிக் பில்லியன் டே

பிக் பில்லியன் டே

விற்பனை இலக்கை அடைய இந்நிறுவனம் மீண்டும் ஒரு பிக் பில்லியன் டே நடத்த உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இதை பற்றி தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart targets sales worth $8 b in 2015

Leading online market place Flipkart is looking at sales worth $8-billion in the current year. The company has announced its ambitious plan at a Town Hall organised in a college auditorium in the city on Wednesday.
Story first published: Friday, February 13, 2015, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X