மும்பை: இம்மாத இறுதியில் வெளிவர உள்ள மத்திய பட்ஜெட்டின் எதிரொலி மற்றும் உலக சந்தையில் நிலவும் நிலையான வர்த்தகத்தின் காரணமாக மும்பை பங்குச்சந்தை இன்று உயர்வுடன் துவங்கி சுமார் 190 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 220.19 புள்ளிகள் உயர்ந்து 29,025 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டியில் 73.70 புள்ளிகள் வரை உயர்ந்து 8,785.25 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்து வந்தது, இன்று இத்துறை பங்குகள் 244 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மற்றும் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் இன்றைய வர்த்தகத்தில் உயர்வுடன் காணப்படுகிறது.கடந்த 5 நாட்களாக மும்பை பங்குச்சந்தை சரிவுடனே உள்ள நிலையில், இவ்வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சந்தை உயர்வுடன் முடிய உள்ளது.
மேலும் மத்திய பட்ஜெட் சந்தையில் புதிய உயர்விற்கு கொண்டு செல்லும் என்றும், நிஃப்டி 9000 புள்ளிகள் வரை எட்டலாம் எனவும் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications