மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழமை மாலையில் வெளியிட்டது, இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வங்கி நாட்டில் 208 வருடங்களாக செயல்பட்டு வருகிறது, மேலும் நாட்டில் வங்கித்துறையில் செய்யப்பட்ட மொத்த டெப்பாசிட் மற்றும் கடன்களில் 25 சதவீதம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அளித்ததுள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
வராக் கடன்
வங்கித்துறைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் வராக் கடன் ஸ்டேட் வங்கியையும் விட்டு வைக்கவில்லை. இக்காலகட்டத்தில் மொத்த கடனில் 4.9 சதவீதம் வராக் கடனாக உள்ளது. கடந்த காலாண்டில் வராக் கடன் அளவு 4.89 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
லாபம்
இக்காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு 30 சதவீதம் அதிகரித்து 2,910 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் லாப அளவு 2,234 கோடியாக இருந்தது. ஆனால் சந்தை வல்லுனர்களின் கணிப்பின் படி இவ்வங்கியின் லாபம் அளவு 3,274 கோடியாக ரூபாயாக இருந்தது.
வருவாய்
இவ்வங்கியின் மொத்த வருவாய் 43,784 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2014ஆம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் இவ்வங்கியின் வருவாய் 39,068 கோடி ரூபாயாக இருந்தது.
வட்டி வருமானம்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அளித்த கடன்களின் மூலம் இவ்வங்கியின் வட்டி வருமானம் 13,777 கோடியாக உள்ளது.
பங்குச்சந்தை
இவ்வங்கியின் காலாண்டு முடிவுகளின் வெளியீட்டின் மூலம் இந்நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 8.23 சதவீதம் உயர்ந்துள்ளது


Click it and Unblock the Notifications