தங்கம் கிராமுக்கு 7 ரூபாய் சரிவு!!
சென்னை: இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில் உலக சந்தைகளில் தங்கத்தின் மீதான வர்த்தகம் குறைவாகவே உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் 24 கேரட் 1 கிராம் தங்கம் 2,758 ரூபாயாக இருந்தது, சனிக்கிழமை வர்த்தகத்தில் இதன் விலை 7 ரூபாய் குறைந்து 2751.15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றம் எதுமில்லை, 1 கிலோ வெள்ளியின் விலை 37,965.00 ரூபாய்க்குவிற்கப்படுகிறது.
இந்தியாவில் திருமண காலம் துவங்கியதை அடுத்து நாட்டில் தங்கத்தின் மீதான வர்த்தகம் அதிகரிக்க துவங்கியுள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications