சென்னை: ஐரோப்பிய சந்தையின் பணசுருக்க நிலை தங்க மற்றும் வெள்ளி மீதான வர்த்தகத்தை அதிகளவில் பாதித்துள்ளது. இன்றைய புல்லியன் சந்தையில் தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாய் சரிந்துள்ளது. இதன் காரணமாக நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த திருமண காலங்களில் தங்கத்தின் விலை சரிவு பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் அளவு 9.4 பில்லியன் டாலரில் (டிசம்பர் மாதம்) இருந்து 8.3 பில்லியன் டாலராக குறைந்து (ஜனவரி மாதம்) உள்ளது. இதனால் மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம்
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் அதிகப்படியான சரிவை காணப்படுகிறது, இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை 26 ரூபாய் சரிந்து 2737.72 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கம் 17 ரூபாய் சரிந்து 2566.88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 270 ரூபாய் குறைந்து 38730.00ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாத காலமாக 62.07 முதல் 62.49 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று இதன் மதிப்பு 60.28 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
வர்த்தக பற்றாக்குறை
ஜனவரி மாதத்தில் இந்தியாவில் ஏற்றுமதி 11.2 சதவீத சரிவும், இறக்குமதி 11.4 சதவீத சரிவும் பதிவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியாவில இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க நகைகள் மற்றும் டெக்ஸ்டைல் ஏற்றுமதி அதிகளவில் குறைந்துள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications