சென்னை: சர்வதேச சந்தையில் மந்தமான வர்த்தகத்தாலும், உள்நாட்டு தங்கத்தின் தேவை குறைந்ததாலும் புதன்கிழமை வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கிராமிற்கு 57 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தை போல வெள்ளியும் கிலோவிற்கு 4,106 ருபாய் வரை குறைந்தது.
2015ஆம் ஆண்டில் மிகப்பெரிய சரிவாக இதை கருதப்படுகிறது. மேலும் நாளையும் தங்கத்தின் விலை சரியும் என தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
6 வார சரிவு
தங்கம் வர்த்தகத்தில் இன்று கிராமிற்கு 57 ரூபாய் சரிந்து இந்திய சந்தையில் தங்கம் 6 வார சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.
தங்கம் விலை
24 கேரட் ஒரு கிராம் தங்கம் 57 ரூபாய் சரிந்து 2,697 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, 22 கேரட் தங்கத்தின் விலை 46 ரூபாய் சரிந்து 2529 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
நேற்று சந்தை முடிவில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 39000.00 ரூபாய்க்கு விற்கப்பட்டது, இன்று இதன் விலை 34893.54 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.
டாலர் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று 17 பைசா சரிந்துள்ளது. இதனால் ஒரு டாலருக்கு 62.33 ரூபாயாக நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் இன்று 184.38 புள்ளிகள் உயர்ந்து 29,320 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டியில் 59.75 புள்ளிகள் உயர்ந்து 8869.10 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications