மும்பை: வியாழக்கிழமை வர்த்தக துவக்கத்ததில் சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும், 11 மணியளவில் ஐரோப்பிய சென்டரல் வங்கி மற்றும் கிரீஸ் வங்கிக்கும் இடையேயான பிரச்சனையில் சந்தை 200 புள்ளிகளை வரை சரிந்தது.
மேலும் சில்லறை முதலீட்டாளர்கள் லாப நோக்குடன் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்யதால் அடுத்த 3 மணிநேரத்திற்கு சந்தை சரிவிலேயே இருந்தது.
மீண்டும் 3 மணியளவில் மத்திய அரசு பங்கு இருப்பு குறைப்பு பற்றிய செய்தி வெளியான காரணத்தால் பங்ககுச்சந்தை மீண்டும் 170 புள்ளிகள் வரை உயர துவங்கியது.
சென்செக்ஸ்
இந்நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 136 புள்ளிகள் உயர்ந்து 29,457 புள்ளிகளை எட்டியது
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் உயர்வுடன் துவங்கி சரிந்தது. இதன் பின் மீண்டும் 26.90 புள்ளிகள் உயர்ந்து 8,896.00 புள்ளிகளை எட்டியது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் செஸ்ஸா ஸ்டெர்லைட் நிறுவனம் 6.61% சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ஹண்டல்கோ, டாடா பவர், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், இன்போசிஸ், மாருதி ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கண்டது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
வங்கித்துறை பங்குகள் நேற்று உயர்வடைந்த நிலையில் இன்று சரிவை சந்ததித்தது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் இன்று சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மிகப்பெரிய சரிவை கண்டது.
மருந்து நிறுவனங்கள்
வங்கித்துறை பங்குகள் போல மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் சரிவை சந்தித்தது. இதில் டாக்டர் ரெட்டி, சிப்லா போன்ற நிறுவனங்கள் குறைவான வளர்ச்சியை சந்தித்தாலும், நாட்டின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமாக கருதப்படும் சன் பார்மா நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications