மும்பை: இன்றைய வர்த்தக சந்தையில் சில்லறை முதலீட்டாளர் லாப நோக்குடன் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை விற்று வருவதால் மும்பை பங்குச் சந்தையில் இன்று 200 புள்ளகள் வரை சரிந்தது.
சந்தையின் முக்கிய நிறுவனமாக கருதப்படும் ரிலையன்ஸ், டாடா குழுமம், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, நிறுவன பங்குகளை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்செக்ஸ்
சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு விற்பனையின் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிந்தது. மதிய வேளையில் சில புள்ளிகள் உயர்ந்து நேற்றை சந்தை முடிவில் இருந்து 123.71 புள்ளிகள் குறைந்து 29,338 புள்ளிகளாக உள்ளது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் 60 புள்ளிகள் வரை காலை வர்த்தகத்தில் சரிந்தது. தற்போது 34.05 புள்லிகள் சரிந்து 8,861.25 புள்ளிகளாக உள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் லாபம் அடைந்த நிறுவனகங்கள் மிகவும் குறைவு, இதில் பெல், ஹன்டல்கோ, sesa sterlite, ஐடிசி, டாக்டர் ரெட்டி, டாடா ஸ்டீல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் சிப்லா ஆகியவை அடக்கம்.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
இப்பட்டியலில் மிகவும் நிலம் பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, டிசிஎஸ், சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, மாருதி, ஹெச்டிஎஃப்சி, டாடா பவர் போன்ற பல முன்னணி நிறுவனங்களை சரிவை தழுவியுள்ளது.


Click it and Unblock the Notifications