சென்னை: சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,200 டாலர் என்ற அளவில் குறைந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு சுமார் 200 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.
இந்த சரிவிற்கு முக்கிய காரணமாக கிரீஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்த தடை மற்றும் சீனாவின் தங்க இறக்குமதி குறைவு என புல்லியன் வர்த்தக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கம் விலை
இன்றைய புல்லியன் வர்த்தக சந்தையில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 26 ரூபாய் குறைந்து 2,685 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து 2,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை போல வெள்ளியின் விலையும் கிலோவிற்கு 200 ரூபாய் குறைந்து, 1 கிலோ பார் வெள்ளி 36,165 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர்
அமெரிக்க ரூபாய்க்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.07 பைசா சரிந்து 62.28 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.25,130
பெங்களுரூ
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,120
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.25,110
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.25,030
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.25,100
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.25,050
More From GoodReturns

அட்சய திருதியை: தங்கம் Pre- Booking செய்வதால் நமக்கு என்ன லாபம்? Pre- Bookingஇல் கவனிக்க வேண்டியது என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?



Click it and Unblock the Notifications