மும்பை:நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் துவங்கியதை அடுத்து இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் துவக்கம் முதலே 100 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மிகவும் சிறப்பாக வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆனால் சந்தை முடிவில் எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களின் பங்குகள் அதிகாளவில் விற்கப்பட்டது. இதன் காரணமாக 256.30 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச்சந்தை முடிவடைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தை இன்று காலையில் 40 புள்ளிகள் உயர்வுடன் 29,295.92 புள்ளிகளுடன் வர்த்தகம் துவங்கியது. இந்நிலையில் மாலை வர்த்தக முடியும் வேலையில் 3 மணி முதல் சந்தை அதிரடியாக சரிய துவங்கியது, இதன் மூலம் 256.30 புள்ளிகள் சரிந்து 28,975.11 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
நிஃப்டியும் மும்பை பங்குச்சந்தையை போலவே வர்த்தக துவக்கத்தில் 25 புள்ளிகள் உயர்வுடன் துவங்கினாலும், 78.65 புள்ளிகள் வரை சரிவை தளுவி 8,754.95 புள்ளிகளை எட்டியது.
லாபமடைந்த நிறுவனங்கள்
சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் மஹிந்திரா, sesa sterlite, டிசிஎஸ், எல் & டி, என்டிபிசி, கோல் இந்தியா நிறுவனங்கள் மட்டுமே 1 சதவீதத்திற்கு குறைவான உயர்வை சந்தித்தது.
சரிவில் ரிலையன்ஸ், டாடா
ரிலையன்ஸ்,GAIL,ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் இன்றை வர்த்தகத்தில் சுமார் 2 சதவீத சரிவை சந்தித்தது.
நஷ்டத்தில் பல நிறுவனங்கள்
அதுமட்டும் அல்லாமல் விப்ரோ, மாருதி, ஹிரோ மோட்டோ கார்ப், ஹெச்டிஎஃப்சி, இன்போசிஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் , ஐசிஐசிஐ வங்கி, சிப்லா, பெல், பார்தி ஏர்டெல், டாடா பவர், பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications