மும்பை: இன்று நாடாளுமன்றத்தில் 12 மணியளவில் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதனால் இன்று மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரயில்வே துறையை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது.
நேற்றைய வர்த்தகத்தில் இத்துறை பங்குகளை லாப நோக்கில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்க துவங்கியதால் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்தது.
ரயில்வே துறை பங்குகள்
இன்று காலை வர்த்தகத்தில் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களான ஜீகாம் எலக்ட்ரானிக் செக்குரிட்டீஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் 4.9 % உயர்வு, புஷன் ஸ்டீல், கண்டைனெர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா 23.1% உயர்வு, டிட்டகார் வேகன்ஸ் 6.9% உயர்வு, டாடா ஸ்டீல்ஸ் 2.6% உயர்வு, ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்பரேஸ்ஷன் 2.55% உயர்வு, ஜேஎஸ்டபிள்யூ 9.4$ உயர்வு அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
சந்தை வர்த்தக துவக்கத்தில் 30புள்ளிகள் சரிவுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை 10.40 மணியளவில் 65.10 புள்ளிகள் சரிவு 28,942.89 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
நிஃப்டியும் காலை முதல் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனிடையில் 10.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை 20.60 புள்ளிகள் சரிந்து 8,746.65 புள்ளிகளை எட்டியது.
டார்கெட்
இன்றைய வர்கத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய 12 முக்கியமான நிறுவனங்களை எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது, இதில் ரயில்வே துறை பங்குகள், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், டிஎல்எஃப், ஒசிஎல், தீவான ஹவுசிங் பைனான்ஸ், ரிலையன்ஸ், என்டிபிசி, மைன்டுடிரீ, எஸ் பாங்க் ஆகிய நிறுவனங்களை குறிப்பிட்டுள்ளது.
லாபம் அடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் லாபம் அடைந்த நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கும் நிறுவனம் sesa sterlite அதனை தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, என்டிபிசி, கெய்ல் ஆகிய நிறுவனங்கள் ஆகும்.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
பெல், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, கோல் இந்தியா, இன்போசிஸ், ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, ஹிரோ மோட்டோ கார்ப், டாக்டர் ரெட்டி, விப்ரோ, சிப்லா, மாருதி, ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் சரிவை தழுவியுள்ளது.


Click it and Unblock the Notifications