சென்னை: கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச சந்தையில் தங்கம் மீதான வர்த்தகம் மந்தமாக இருப்பதால் இந்திய சந்தையில் உயர்ந்த உலோகங்களாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அதிகப்படியான ஏற்ற இறக்கம் சந்தித்து வருகிறது.
ஜனவரி 31ஆம் தேதி 2,850 ரூபாயாக இருந்த 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று 2,698 ரூபாய் அளவில் குறைந்துள்ளது. வெள்ளியும் தங்கத்தை போல அதிகளவில் சரிவை சந்தித்துள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி 1 கிலோ வெள்ளியின் விலை 39875 ரூபாயில் இருந்து இன்று 36990.00 ரூபாயாக குறைந்துள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 13ரூபாய் குறைந்து 2523.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 14ரூபாய் குறைந்து 2698.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று 0.08 பைசா உயர்ந்து 61.81 ரூபாய்க்கு நாணய வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications