டெல்லி: கடந்த 2 மாத கலாமாக கலால் வரி அதிகரிப்பால் ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி மந்தமான நிலையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் வேலையிலும், ஆட்டோமொபைல் சந்தை 176 புள்ளிகள் சரிவு இத்துறையின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் பெரும்பாலான ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. இதில் மாருதி, டாடா மோட்டார்ஸ், ஹிரோ மோட்டோ கார்ப், எம்ஆர்எஃப், அப்பலோ டையர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் கார்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டைதை அடுத்து இத்துறை நிறுவனங்களின் பங்குகள் உயர துவங்கியது.
இன்று காலை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன பங்குகள் 1 சதவீதத்திற்கு குறைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது.
மேலும் மும்பை பங்குச்சந்தை 12 மணியளவில் 29,203.33 புள்ளிகள் அளவில் குறைந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து 29,537.44 புள்ளிகளை எட்டியது. இதனால் பங்குச்சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.


Click it and Unblock the Notifications