டெல்லி: மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை முதல் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரமாக இந்திய வங்கித்துறையில் வராக் கடன் அளவு உயர்வு மற்றும் குறைவான காலாண்டு வளர்ச்சி ஆகிய காரணங்களால் வங்கித்துறை பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் கடுமையான சரிவை சந்தித்தது வந்தது.
ஆனால் இன்று இதன் நிலை தலைகீழாக மாறியுள்ளது, இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்திய வங்கித்துறை பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 281 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
BANKEX குறியீடு
கடந்த ஒரு மாத வர்த்தகத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி வங்கித்துறை பங்குகள் 21,092 புள்ளிகள் வரை சரிந்தது, அதைதொடர்ந்து 13ஆம் தேதி 22,187 புள்ளிகள் வரை உயர்ந்து வியாழக்கிழமை 21,276 புள்லிகள் வரை குறைந்தது BANKEX குறியீடு. இன்று காலையில் BANKEX குறியீடு 264.15 புள்ளிகள் வரை உயர்ந்து 22122.60 புள்ளிகளை எட்டியது.
வங்கித்துறை பங்குகள்
இன்றைய பட்ஜெட் வெளியீட்டில் வீட்டுக்கடனுக்கான தளர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. அருண் ஜேட்லி சந்தை கணிப்புகளின் படி தளர்வுகளை அறிவித்தால் வங்கித்துறை பங்குகள் சுமாப் 350 புள்ளிகள் வரை உயரும். எனவே இன்றைய முதலீட்டிற்கு வங்கி துறை பங்குகள் சிறந்த தேர்வாகும்.
2 சதவீத வளர்ச்சி
இன்றைய வர்த்தகத்தில் பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஆகிய வங்கிகள் சுமார் 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதேபோல் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
தனியார் வங்கிகள்
மேலும் நாட்டின் முன்னணி தனியார் வங்கி நிறுவனமாக திகழும் ஹெச்டிஎஃப்சி, யெஸ் பாங்க், இண்டஸ்இன்டு பாங்க், கோட்டாக் மஹிந்திரா வங்கி, பெடரல் வங்கி ஆகியவை 1 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications