டெல்லி: நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று 2015-16ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக பங்குச் சந்தை வர்த்தகம் துவக்கத்திலேயே சென்செக்ஸ் கிடுகிடுவென உயர்ந்தது.
சந்தை துவங்கி 15 நிமிடங்களில் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 29,481.33 புள்ளிகளை எட்டியது, அதேபோல் நிஃப்டியும் 70.40 புள்ளி உயர்ந்து 8,917.55 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 141.38 புள்ளிகள் உயர்ந்து 29,361.50 புள்ளிகள் என்ற அளவை அடைந்தது. நிஃப்டியும் 57.25 புள்ளிகள் உயர்ந்து 8,901.85 புள்ளிகளை அடைந்தது இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
பொதுத்துறை நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் பெல், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஒஎன்ஜிசி, என்டிபிசி, கெய்ல், கோல் இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிகப்படியான உயர்வை கண்டு வருகிறது.
புதிய உச்சம்
இன்றைய வர்த்தகத்தில் இரு சந்தைகளும் புதிய உச்சத்தை எட்டும் எனவும் சந்தை வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விடுமுறை
வெள்ளிக்கிழமை சந்தை முடிவு
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பட்ஜெட்டை எதிர்பார்த்து சில்லறை முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீட்டு காரணமாக சென்செக்ஸ் சுமார் 473.82 புள்ளிகள் உயர்ந்து 29,413 என்ற அளவில் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications