டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் 2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கிய நிலையில் ஐடித்துறை பங்குகள் சரிவை கண்டது.
இந்நிலையில் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா போன்ற பல நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை கண்டு வருகிறது. இதனால் ஐடித்துறை குறியீடு சரிவில் தள்ளாடியது.
ஐடித்துறை பங்குகள்
இன்றைய வர்த்தக துவக்கதில் பிற துறைகளை போல ஐடித்துறை பங்குகள் உயர்வுடன் துவங்கினாலும் 10 மணியளவில் 30 புள்ளிகள் சரிவை கண்டது குறிப்பிடதக்கது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகர் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய துவங்கிய சில நிமிடங்களில் உயர்வில் இருந்த ஐடி துறை குறியீடு சரிவை தழுவியது.
விப்ரோ
அசிம் பிரேம்ஜி தலைமை வகிக்கும் விப்ரோ நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் 0.18 சதவீத சரிவை கண்டது.
சரிவடைந்த நிறுவனங்கள்
விப்ரோ நிறுவனத்தை தொடர்ந்து டெக் மஹிந்திரா, மைண்டுட்ரீ, ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்கள் சரிவை தளுவியது. இதில் ஹெச்சிஎல் நிறுவனம் மட்டும் சுமார் 1.21 சதவீத சரிவை சந்தித்தது.
டிசிஎஸ்
டாடா குழுமத்தில் அதிக லாபம் அளிக்கும் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 0.10 சதவீத உயர்வை மட்டுமே உயர்ந்துள்ளது.
பிற நிறுவனங்கள்
இன்போசிஸ், சிஎம்சி, வக்ரங்கி, OFSS மற்றும் மெப்சிஸ் போன்ற நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் உயர்வை சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications