சென்னை: அமெரிக்காவின் வட்டி உயர்வு பீதியால் ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று சரிவை தழுவியது, இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தை மற்றும் நிஃப்டி சந்தைகளில் தொடர் சரிவை சந்தித்தது.
இந்நிலையில் தங்கம் மீதான வர்த்தகத்தை பார்க்கும்போது சர்வதேச சந்தையிலும் சரி உள்நாட்டு சந்தையிலும் சரி அதிகளவில் குறைந்தது. இதன் காரணமாக 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் 67 ரூபாய் சரிந்துள்ளது.
தங்கம் விலை
வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 2,695 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று இதன் விலை சுமார் 67 ரூபாய் குறைந்து 2,628 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2,520 ரூபாயில் இருந்து 2,459.93 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதிகளவில் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ வெள்ளியின் விலை 36,385.00 ரூபாயில் இருந்து 36,000.00 ரூபாயாக குறைந்துள்ளது.
டாலர் மற்றும் ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.42 பைசா சரிந்து 62.58 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 604.17 புள்ளிகள் சரிவுடன் 28,844.78 புள்ளிகளையும், நிஃப்டி 181.00 புள்ளிகள் சரிவுடன் 8756.75 புள்ளிகளுடன் சந்தை முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications