மும்பை: அமெரிக்காவின் ஜாப் டேட்டாவின் வலுவான நிலையில் இந்நாட்டின் வேலையில்லாதோர் அளவு சுமார் 5.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் அமெரிக்க அரசு தனது வட்டி வகித்தை கூடிய விரைவில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகளில் ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இந்திய சந்தைகள் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் கடுமையான சரிவை சந்துள்ளது.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 620 புள்ளிகள் வரை சரிந்தது, மேலும் சந்தைய பட்டியலிட்டுள்ள டாப் 50 நிறுவனங்கள் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தை தவிர அனைத்து நிறுவனங்களும் சரிவை தழுவியது. இதில் வங்கித்துறை பங்குகள் மற்றும் ஐடி நிறுவன பங்குகள கடுமையாக பாதித்தது.
சென்செக்ஸ்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் 10.30 மணியளவில் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இதன் பின் சில புள்ளிகள் உயர்ந்தாலும் சரிவு பாதையிலேயே வர்த்தகம் தொடர்ந்து செயல்பட்டது.
411.11 புள்ளிகள் சரிவு
10.30 மணியளவில் சென்செக்ஸ் 411.11 புள்ளிகள் வரை சரிந்து 29,037.84 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
கடந்த வாரம் நிஃப்டி 9,006 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்றைய வர்த்தகத்தில் துவக்கம் முதலே சரிவை சந்தித்தது. இதன் மூலம் நிஃப்டி 125.25 புள்ளிகள் சரிந்து 8,812.50 புள்ளிகளை அடைந்தது.
வங்கிப் பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் வங்கிப்பங்குகள் குறியீடான Bankex 450 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்துள்ளது. மேலும் முன்னணி வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸடேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற அனைத்து வங்கிகளும் சரிவை சந்தித்துள்ளது.
ஐடித்துறை
வங்கித்துறை பங்குகளை போலவே ஐடித்துறை பங்குகளும் 210 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்றை அனைத்து நிறுவனங்களும் சரிவை தழுவியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications