சென்னை: அமெரிக்க அரசின் வட்டி உயர்வு நடவடிக்கையால் ஆசிய சந்தைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்தது. இதனால் தங்கத்தின் மீதான வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகளவில் குறைந்தது.
இதனால் புல்லியன் சந்தையில் இன்று தங்கம் விலை கிராமிற்கு 50 ரூபாய் அளவு முடிவடைந்தது.
தங்கம்
நேற்றைய வர்த்தக முடிவில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 2,651 ரூபாயாக முடிவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் இதன் விலை 50 ரூபாய் குறைந்து 2,601 ரூபாயாக உள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2436.86 ரூபாயாக உள்ளது.
வெள்ளி
தங்கத்தை போலவே இன்றைய வர்த்தகத்தில் வெள்ளி விலை 3099.81 ரூபாய் வரை குறைந்தது. இதன் மூலம் 1 கிலோ வெள்ளியின் விலை 35,540.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
டாலர்
யூரோ மற்றும் ஜாப்பான் யென் நாணயத்திற்கு எதிராக அமெரிக்க டாலர் 12 வருட உயர்வை எட்டிய நிலையில், ரூபாய் மதிப்பு 62.84 ரூபாயாக உள்ளது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 134.91 புள்ளிகள் சரிந்து 28,709.87 புள்ளிகள் அடைந்தது, அதேபோல் நிஃப்டி 44.70 புள்ளிகள் சரிந்து 8,712.05 புள்ளிகளை அடைந்தது.
வட்டி உயர்வு நடவடிக்கை
அமெரிக்காவில் பிப்ரவரி மாத்தின் வலுவான ஜாப்ஸ் டேட்டா மற்றும் வேலையில்லாதோர் எண்ணிக்கை 5.5 சதவீதமாக குறைந்துள்ளதால் அமெரிக்க அரசு வட்டி உயர்வு நடவடிக்கையை முன்கூட்டியே எடுக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
12 வருட உயர்வு
இதன் எதிரொலியாக அமெரிக்க டாலரின் மதிப்பு, ஆசிய சந்தை வர்த்தகத்தில் யூரோ மற்றும் யென் நாணயங்களுக்கு எதிராக சுமார் 12 வருட உயர்வை எட்டியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களும் அதிகளவில் பாதிக்க உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஆசிய சந்தைகள் அனைத்து இன்று சரிவுடனே முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications