மும்பை: கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தையில் மிகப்பெரிய அளவில் சரிவை கண்டு வந்த நிலையில் புதன்கிழமை வர்த்தக துவக்கத்தில் உயர்வுடன் துவங்கினாலும், பல ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு சந்தை குறைந்த அளவிலான சரிவை சந்தித்தது. இதனால் இன்றைய வர்த்தகம் முழுவதும் மந்தமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் தொலைதொடர்பு நிறுவனங்கள் அதிகப்படியான உயர்வை கண்டாலும், வங்கித்துறை, தொழில்நுட்ப மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை தழுவியது.
சென்செக்ஸ்
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 50.70 புள்ளிகள் வரை சரிந்து 28,659.17 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 12.10 புள்ளிகள் வரை சரிந்து 8,699.95 புள்ளிகளை அடைந்தது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல், என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா, கெயில், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை உயர்வை கண்டது.
நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்
ஹின்டல்கோ, டாடா ஸ்டீல், சிப்லா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, ஒஎன்ஜிசி, டிசிஎஎஸ், எஸ்பிஐ, இன்போசிஸ், பெல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இன்றைய வர்த்தகத்தில் சரிவை கண்டது.


Click it and Unblock the Notifications