9 மாதத்தில் 664.59 டன் தங்கம் இறக்குமதி: இந்தியா
டெல்லி: 2014ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாத காலகட்டத்தில் 26 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2014-15ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலகட்டத்தில் இந்தியா, 25.74 பில்லியன் டாலர் மதிப்புள்ள 664.29 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக மத்திய மாநில நிதி அமைச்சரான ஜெயந்த் சின்ஹா எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இன்றைய தங்கம் விலையை தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.
இக்காலகட்டத்தில் இந்தியா 1.55 பில்லியன் டாலர் மதிப்புள்ள 38.11 டன் தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் பிப்ரவரி ரிச்ர்வ் வங்கி நாட்டின் முன்னணி தங்க வர்த்தக நிறுவனங்களுக்கு தங்க இறக்குமதியில் சில தளர்வுகளை அறிவித்தது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications