இந்த விஷயத்தில் சோமாலியா-வை விட மோசமாக உள்ளது இந்தியா!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பெண்களுக்கான வேலைவாய்ப்பை அளிப்பதில் பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில் இருப்பதாக இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பெண்கள் தினத்தின்று, நாட்டில் பெண்களின் நிலை, கல்வி, சுதந்திரம் மற்றும் கடமைகள் பற்றி பல இடங்களில், பல தரப்பினர் பேசிக்கொண்டு இருந்தாலும். இந்தியாவில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதைப் பற்றி யாரும் பேசவில்லை.

இது தான் இந்தியாவின் நிலை..

இது தான் இந்தியாவின் நிலை..

இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பின் அளவு பஹ்ரைன், மலேஷியா மற்றும் ஏன் சோமாலியா(37%) நாடுகளை விடவும் குறைவாக இருப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா) மத்தியில் இந்தியா பெண்களுக்கான வேலைவாய்ப்பை அளிப்பதில் கடைசி இடங்களில் இருப்பதாக இந்தியா ஸ்பென்ட் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சரிவு

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சரிவு

2011ஆம் ஆண்டில் நாட்டின் பெண்கள் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (WPR) 25.5% ஆக இருந்தது, இதே காலகட்டத்தில் உலக நாடுகளில் ஏழை நாடாக கருதப்படும் சோமாலியாவில் WPR வகிதம் 35 சதவீதமாக இருக்கிறது.

காரணங்கள்
 

காரணங்கள்

உயர் கல்வி, குழந்தை பாராமரிப்பு மற்றும் குடும்ப சூழல் ஆகியவை பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் பாதித்ததற்கு முக்கிய காரணமாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

துறை சார்ந்த புள்ளி விபரம்

துறை சார்ந்த புள்ளி விபரம்

பார்மா மற்றும் சுகாதார துறை, வங்கி நிதியியல் துறை மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் பிபிஒ/ ஐடி ஆகிய துறைகளில் பெண்கள் 38 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் பணிபுரிகின்றனர்.

இதேபோல் உற்பத்தி, அட்டோமொபைல், இன்ஜினியரிங் துறைகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவில் பெண்கள் பணியாற்றி வருவதாக இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நகரப்புறம் மற்றும் கிராமபுறம்

நகரப்புறம் மற்றும் கிராமபுறம்

இந்தியாவில் கிராமபுறங்களில் (30%) இருக்கும் பெண்களை விடவும் குறைவான அளவிலேயே நகரப்புற பெண்கள் (15.4%) பணியாற்றி வருகின்றனர் என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jobs For Women: Why India Does Worse Than Somalia

Women’s workforce participation in India is the lowest among the BRICS nations. A range of countries, such as Bahrain, Malaysia and even Somalia (37%) do much better.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X