எடுத்த எடுப்பில் 300 புள்ளிகள் உயர்ந்தது மும்பை பங்குச் சந்தை!

மும்பை: செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்களின் அதிகளவிலான முதலீடு மற்றும் ஆசிய சந்தைகளின் நிலவும் சிறப்பான வர்த்தகத்தின் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் இன்று துவங்கும் அமெரிக்க பெடரல் வங்கியின் மறுஆய்வு கொள்கை கூட்டத்தின் எதிரோலியாக பல ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் சரிவைச் சந்தித்தது.

300 புள்ளிகள்

300 புள்ளிகள்

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 11.30 மணியளவில் 330 புள்ளகள் உயர்ந்து 28,758.92 புள்ளிகளை எட்டியது. மும்பை பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள டாப் 50 நிறுவனங்களில் கெயில், இன்போசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டுமே குறைந்த அளவிலான சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி

நிஃப்டி

காலை வர்த்தகம் துவங்கியதிலிருந்தே ஏற்ற நிலையில் இருந்தது நிப்டி. அதன் குறியீடு, 96.80 புள்ளிகள் வரை உயர்ந்து 8,729.95 புள்ளிகளை அடைந்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள்

பொதுத்துறை நிறுவனங்கள்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனகங்களின் பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று இத்துறை பங்குகள் 66.48 புள்ளிகள் உயர்ந்து 7,837.10 புள்ளிகளை எட்டியது.

வங்கித் துறை

வங்கித் துறை

கடந்த 1 மாத காலமாக வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்து வரும் தருவாயில், இன்று வங்கித்துறை பங்குகள் 213.77 புள்ளிகள் வரை உயர்ந்தது.

ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

வங்கித்துறையை போலவே ஆட்டோமொபைல் துறை நிறுவன பங்குகளிலும் நல்ல வர்த்தகம் நடந்தது. ஆட்டோமொபைல் நிறுவன பங்கு குறியீடு 280 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

ஐடித்துறை

ஐடித்துறை

இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தாலும் இத்துறை சார்ந்த பிற நிறுவனங்கள் அனைத்து உயர்வை கண்டு வருகின்றன. ஐடி துறை குறியீடு இன்று 35 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+