சென்னை: தங்கம் விலை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத சரிவை எட்டியுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் 2 நாள் கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் அரசு பத்திரங்களுக்கான வட்டி வகிதத்தை, உயர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் புதன்கிழமை நாணய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான வர்த்தகத்தில் மந்தநிலை நிலவியது.
இதைத் தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை நான்கு மாத சரிவை எட்டியது.
பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவதற்கான காராணங்கள் வலுவாக இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் பங்குச்சந்தை மீதான முதலீடுகளை அதிகளவில் குறைத்துள்ளனர்.
தங்கம்
கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது வந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை 4 மாத சரிவை எட்டியுள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து 2,441.00 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 6 குறைந்து, 2,619.00 ரூபாயாக உள்ளது.
வெள்ளி
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 212 ரூபாய் குறைந்து 35,216 ரூபாய்க்கு விற்கபனையாகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் அளவு குறைந்துள்ளதால் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி கட்டணங்களை குறைத்துள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் இறக்குமதி அளவு புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை
புதன்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 114.26 புள்ளிகள் குறைந்து 28,622.12 புள்ளிகளை எட்டியது. நிஃப்டியும் 37.40 புள்ளிகள் சரிந்து 8,685.90 புள்ளிகளை அடைந்தது.
டாலர் - ரூபாய்
இன்றைய நாணய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.71 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.24,450
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.24,440
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ. 24,450 என விற்பனையாகிறது.
டெல்லி
நாட்டின் தலைநகரான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.24,380 ஆக உள்ளது
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.24,410க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.24,360 என விற்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications