மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சில்லறை முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்நோக்கி பங்கு இருப்பை குறைத்தால் சென்செக்ஸ் குறியீடு சரிந்தது.
பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்ததால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாபத்தை எதிர்நோக்கி பங்கு இருப்பை குறைத்தனர். இதனால் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரை சரிந்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 205 புள்ளிகள் வரை சரிந்து 28,212 புள்ளிகளை அடைந்தது. வர்த்தக துவக்கத்தில் சில நொடிகளில் சந்தை உயர்வுடன் இருந்தாலும், இதன் பின் தொடர் சரிவை சந்தித்தது.
நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 70 புள்ளிகள் வரை சரிந்து 8,567.40 புள்ளிகளை எட்டியது.
லாபமைடைந்த நிறுவனங்கள்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டெக்னாலஜி நிறுவனங்கள் அனைத்தும் உயர்வை சந்தித்தது. குறிப்பாக விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உயர்வை சந்தித்தது.
கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்வை சந்தித்தது.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து அரசு துறை நிறுவனங்களான ஒஎன்ஜிசி, பெல், கெயில், என்டிபிசி ஆகிய நிறுவனங்களும் சரிவை தழுவியது.
பார்தி ஏர்டெல்
ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த வாரம் சிறப்பான வர்த்தகத்தை பெற்றது. ஆனால் திங்கட்கிழமை முதல் இந்நிறுவனம் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications