சென்னை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 7 ரூபாய் குறைந்தது.
ஆசிய சந்தையில் நிலவிய மந்தநிலை, இந்திய சந்தையை அதிகளவில் பாதித்தது, இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சந்தை முடிவில் 69.06 புள்ளிகள் சரிந்து 28,192.02 புள்ளிகளை எட்டியது.
நாணய சந்தை
இதன் காரணமாக நாணய சந்தையில் தங்கம் மீதான வர்த்தம் அதிகளவில் குறைந்தது. 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 7 ரூபாய் குறைந்து 2,646 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் விலை
22 கேரட் தங்கத்தின் விலை 2,491 ரூபாயில் இருந்து 2,484 ரூபாய் வரை சரிந்தது. இதன் காரணமாக சில்லறை வர்த்தக சந்தையில் தங்கம் மீதான வர்த்தம் அதிகரித்தது.
வெள்ளியின் விலை
தங்கத்தை போல வெள்ளியின் விலையும் இன்றைய வர்த்தகத்தில் சரிவை தழுவியது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்லியின் விலை 36,930 ரூபாய் என்ற விலையில் இருந்து 37,645.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மிதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 0.05 பைசா உயர்ந்து 62.26 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications