மும்பை: ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகத்தின் காரணமாக இந்திய சந்தையில் வர்த்தக அளவு குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு எதும் இல்லாமல் குறைவான வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 60 புள்ளிகள் வரை உயர்ந்தாலும் 9.45 மணியளவில், வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை விட 10 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
இந்நிலையில் 11.30 மணியளவில் சந்தை வர்த்தகம் நிலைப்பெற்று 16.69 புள்ளிகள் உயர்ந்து 28,296.72 புள்ளிகள் வரை உயர்ந்தது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டி குறியீடும் மிகவும் சொற்ப அளவிவலான உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது. 11.30 மணியளவில் நிஃப்டி 2.50 புள்ளிகள் உயர்ந்து 8,573.40 புள்ளிகளை எட்டியது.
டெக்னாலஜி நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் சந்தையில் முக்கிய டெக்னாலஜி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவு பாதையிலேயே உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெல், கோல் இந்தியா, ஸ்டேட் பாங்க் இந்தியா, ஆகிய அரசுத்துறை நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்த நிலையில் என்டிபிசி, கெயில், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் உயர்வை சந்தித்தது.
ரிலையன்ஸ் மற்றும் டாடா
இந்தியாவின் முன்னணி பலதுறை நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் டாடா நிறுவனங்கள் கடந்த ஒரு வார காலமாக சரிவை சந்தித்து வந்தது. இன்றைய வர்த்தகத்திலும் ரிலையன்ஸ், டாடா பவர், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications