30 புள்ளிகள் சரிவுடன் முடிந்த மும்பை பங்குச் சந்தை
மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கினாலும் சந்தை முடியும் வேளையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 50 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தை நிலைப்பெற்று உள்ளதாலும், இந்திய சந்தையில் அன்னிய முதலீடு அதிகரித்ததாலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் வர்த்தக துவக்கத்தில் உயர்வை சந்தித்தது.

செவ்வாய்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30.30 புள்ளிகள் குறைந்து 28,161.72 புள்ளிகளை அடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் சந்தை துவக்கத்தில் உயர்வை சந்தித்தாலும், வர்த்தக முடிவில் 8 புள்ளிகள் சரிந்து 8,542.95 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் மற்றும் ரிலையன்ஸ் சிறப்பான உயர்வை பெற்றது.


Click it and Unblock the Notifications