மும்பை: செபியின் புதிய உத்தரவு காரணமாக இந்திய நிறுவனங்கள் அனைத்தும் நிர்வாக குழுவில் பெண் தலைவர்களை நியமிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் உயர் மட்ட குழுவில் பெண் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆணையிட்டது.
செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் டாடா, பஜாஜ் குழுமங்கள் போன்ற 50 நிறுவனங்கள் பெண் தலைவர்களை நியமனம் செய்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
யு.கே.சின்ஹா
கடந்த வெள்ளிக்கிழமை சந்தையில் பட்டியலிட்டுள்ள 9,000 நிறுவனங்கள், நிர்வாக குழுக்களில் ஒரு பெண் தலைவரையாவது நியமித்துவிட வேண்டும் என போராடி வருகின்றன. இது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம் என செபி அமைப்பின் தலைவர் யு.கே.சின்ஹா தெரிவித்தார்.
பெண் தலைவர்
நியமனத்திற்கான கடைசி நாள் நெருங்கியுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மட்டும் நாட்டின் முக்கிய நிறுவனங்களில் டாடா இண்டர்நேஷ்னல், பஜாஜ் ஆட்டோ போன்ற 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெண் தலைவர்களை நியமனம் செய்ததுள்ளதாக பங்குச்சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடுமையான நடவடிக்கை
ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் நியமன பணிகள் முடிக்கவில்லை என்றால் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செபி மற்றும் பங்குச் சந்தை நிர்வாகம் இந்திய நிறுவனங்கள் எச்சரித்திள்ளது.
டாடா இண்டர்நேஷ்னல்
செபியின் ஆணையை ஏற்று டாடா இண்டர்நேஷ்னல் நிறுவனம் தனது நிர்வாக குழுவில் நிர்வாக அதிகாரம் இல்லாத தனி இயக்குனராக வேதிகா பந்தன்கரை நியமித்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் ஆட்டோ நிர்வாக குழுவில் இருந்து சுமன் கிர்லோஸ்கர் மார்ச் 31ஆம் தேதியன்று பதவி விலகுவதால், இப்பணியிடத்தில் கீதா பிரமல் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஸ்ரீராம் ஈபிசி நிறுவனத்தில் சந்திரா ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications