சென்னை: ஆசிய சந்தையில் வர்த்தகம் வலிமை அடைந்ததால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.
புதன்கிழமை நாணய சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததால் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7 ரூபாய் உயர்ந்து 2,665 ரூபாய்க்கும், 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 7 ரூபாய் உயர்ந்து 2,492 ரூபாயக்கும் வர்த்ககம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 90 ரூபாய் உயர்ந்து 38,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை வர்த்தக சந்தையில் இதன் விலை 36,886.89 ரூபாய் வரை குறைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் விலை 0.07 பைசா குறைந்து 62.33 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் 49.89 புள்ளிகள் சரிந்து 28,111.83 புள்ளிகளை அடைந்தது, நிஃப்டியும் 12.15 புள்ளிகள் சரிவில் 8,530.80 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications