தங்கம் விலை கிராமுக்கு 54 ரூபாய் உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1 கிராம் தங்கத்தின் விலை 54 ரூபாய் உயர்ந்து 2,719 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

உலகச் சந்தையில் நிலவும் மந்த நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் செய்த முதலீட்டை தங்கம் மீது மாற்றியுள்ளனர், இதனால் தங்கம் விலை ஓரே நாளில் 54 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் விழா காலம் துவங்கியுள்ள நிலையில் சில்லறை சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை அதிகரித்துள்ளது.

 தங்கம் விலை

தங்கம் விலை

24 கேரட் 1கிராம் தங்கத்தின் விலை 54 ரூபாய் அதிகரித்து 2,719 ரூபாய்க்கும், 22 கேரட் 1 கிராம் தங்கம் 50 ரூபாய் உயர்ந்து 2,542 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் 1கிலோ பார் வெள்ளியின் விலை 890 ரூபாய் உயர்ந்து 39,100.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டாலர் - ரூபாய்

டாலர் - ரூபாய்

நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் 0.35 பைசா உயர்ந்து 62.68 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தை
 

மும்பை பங்குச் சந்தை

சர்வதேச சந்தையில் மந்த நிலையின் காரணமாக இன்றைய பங்குச் சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 654.25 புள்ளிகள் சரிந்து 27,457.58 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி 188.65 புள்ளிகள் சரிந்து 8,342.15 புள்ளிகளை அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price jumps Rs 400 on global cues, buying by jewellers

Gold prices spurted by Rs 400 to trade at Rs 26,950 per 10 grams at the bullion market Thursday after the precious metal climbed above USD 1,200 an ounce in Singapore amid increased buying by jewellers to meet seasonal demand.
Story first published: Thursday, March 26, 2015, 17:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X