மும்பை: சர்வதேச சந்தையில் நிலவிய மோசமான வர்த்தகத்தின் காரணமாக மும்பை பங்குச் சந்தை இன்று 600 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
மார்ச் மாத பங்கு ஒப்பந்தங்கள் இன்று முடிவடைவதால் விற்பனை அதிகரித்தாலும் கூட, முதலீட்டு அளவு குறைந்துள்ளது. இதுவே சந்தை சரிவிற்கு முக்கிய காரணம் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 654.25 புள்ளிகள் சரிந்து 27,457.58 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி 188.65 புள்ளிகள் சரிந்து 8,342.15 புள்ளிகளை அடைந்தது.
1,838 புள்ளிகள் சரிவு
கடந்த ஒரு மாத காலத்தில் இந்திய சந்தை மிகவும் மோசமான நிலையை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி சந்தை முடிவில் சென்செக்ஸ் 29,593.73 அடைந்த நிலையில், இன்று 350 புள்ளிகள் சரிவுடன் மொத்தம் 1,838 புள்ளிகள் குறைந்து 27.755.11 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 355.34 புள்ளிகள் குறைந்து 27,756.49 புள்ளிகளை எட்டியுள்ளது. இதனால் வங்கி, ஐடி, மருத்து உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியுள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 87.20 புள்ளிகள் சரிந்து 8,443.60 புள்ளிகளை அடைந்தது.
உலக சந்தைகள்
புதன்கிழமை வர்த்தகத்தில் இந்தியா உட்பட்ட பல நாடுகளின் சந்தைகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக அமெரிக்கவின் நாஸ்டாக் குறியீடு (2.37% சரிவு) ஒரு ஆண்டு சரிவை சந்தித்துள்ளது.
இதன் எதிரொலியாகவே வியாழக்கிழமை இந்திய சந்தையில் 350 புள்ளிகள் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
சீனா 0.58% உயர்வு
வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஹாங்காங் மற்றும் ஜப்பான் சந்தைகள் அதிகளவிலான சரிவை சந்தித்திருக்கும் நிலையில் சீன 0.58 சதவீதம் உயர்ந்துள்ளது.
முக்கிய சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், நுகர்வோர், ஆட்டோமொபைல், வங்கி, கேப்பிடல் கூட்ஸ் மற்றும் எஃப்எம்ஜிசி துறைகள் 0.2 சதவீதம் முதல் 0.8 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.
கத்தார் நாட்டுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் காரணமாக மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் உயர்வை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications