மும்பை: மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பிரச்சனைகளின் காரணமாக இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு தொடந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 415 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
2014ஆம் நிதியாண்டு முடியும் நேரத்தில் முதலீட்டாளர்கள் இந்தியா சந்தையில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றது.
சென்செக்ஸ்
வார்த்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 418 புள்ளிகள் வரை உயர்ந்து 27,876.82 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 119.10 புள்ளிகள் வரை உயர்ந்து 8,460.50 புள்ளிகளை அடைந்தது. கடந்த வார சர்வதேச சந்தையில் இருந்த முதலீகள் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது மாற்றப்பட்டதால் பங்குச்சந்தை வர்த்தகம் மோசமான நிலையில் இருந்தது குறிப்பிடதக்கது.
முக்கிய துறைகள்
இன்றைய வர்த்தகத்தில் எஃப்எம்ஜிசி, பார்மா, பவர், பாங்கிங் மற்றும் டெக்னாலஜி துறை நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை சந்தித்தது.
ரிலையன்ஸ் மற்றும் டாடா
திங்கட்கிழமை வரத்தகத்தில் டாடா மோட்டார்ஸ், டாடா பவர், ரிலையன்ஸ், கெயில் ஆகிய நிறுவனங்கள் 0.25 சதவீதத்திற்கு அதிகமான அளவில் சரிவை சந்தித்ததுள்ளது.


Click it and Unblock the Notifications