வரி செலுத்தாமல் ஏமாத்தினா... இப்படித்தான் சந்தி சிரிக்க வச்சிடுவோம்! - வருமான வரித்துறை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வருமான வரி செலுத்தாத நிறுவனங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் 18 நிறுவன பெயர்களை மத்திய வருமான வரித்துறை வெளியிட்டது.

வருமான வரித்துறை 2014-15ஆம் நிதியாண்டுக்கான வரி வசூல் இலக்கை அடைய பல முயற்சிகள் செய்துவரும் நிலையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான வரி பணம் செலுத்தாத நிறுவனங்களின் பெயர்களை பொது மக்கள் மத்தியிலும், சக போட்டி நிறுவனங்கள் மத்தியில் வெளியிட்டு அவமானப்படுத்த முடிவு செய்துள்ளது.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

"இத்தகைய நடவடிக்கை பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் அரசை ஏமாற்றுவோரை அம்பலப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அதுமட்டும் அல்லாமல் வரி நிலுவை வைத்துள்ள பிற நிறுவனங்களையும் வரிப் பணத்தை செலுத்த வைக்கும்" என வருமான வரித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிறுவன பெயர்கள்

நிறுவன பெயர்கள்

இந்த 18 நிறுவனங்கள் மற்றும் நிலுவை தொகை ஆகிய தகவல்களை திங்கட்கிழமையே வருமான வரித்துறை, தனது இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துவிட்டது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

சோமனி சிமெண்ட் 27.47 கோடி, ப்ளு இன்பர்மேஷ்ன் டெக்னாலஜி ரூ.75.11 கோடி, ஆப்பிள்டெக் சொல்யூஷன்ஸ் ரூ.27.07 கோடி, ஜூப்பிடர் பிஸ்னஸ் ரூ.21.31 கோடி, மற்றும் ஹிராக் பயோடெக் ரூ. 18.54 கோடி ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றி வரி பணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன.

குஜராத் நிறுவனங்கள்

குஜராத் நிறுவனங்கள்

ஐகான் பயோ பார்மா & ஹெல்த்கேர் ரூ.17.69 கோடி, பேன்யான் & பெரி அலாய் ரூ.17.48 கோடி, லக்ஷமிநாராயன் டி தாக்கர் ரூ.12.49 கோடி, விராக் டையிங் & பிரின்டிங் ரூ.18.57 கோடி, பூனம் இண்டஸ்ட்ரீஸ் ரூ.15.84 கோடி, குன்வார் அஜய் புட்ஸ் ரூ.15 கோடி ஆகிய நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் செயல்படும் நிறுவனங்களாகும்.

பிற மாநில நிறுவனங்கள்

பிற மாநில நிறுவனங்கள்

ஜெய்ப்பூரை சேர்ந்த கோல்டுஷூக் டிரேடு ரூ.75.47 கோடி, கொல்கத்தாவை சேரந்த விக்டர் கிரேடிட் & கட்டுமானம் ரூ. 3.81 கோடி, நோபல் மெர்சன்டைஸ் ரூ.11.93 கோடி, புனே மாநிலத்தை சேர்ந்த ஜிகே தார்னே ரூ.38.31 கோடி.

முதல் முறை

முதல் முறை

வருமான வரித்துறை வரி செலுத்தார நிறுவன பெயர்களை வெளியிடுவது முதல் முறையாகம். இதன் மூலம் மத்திய அரசு வரி பணத்தை வசூல் செய்வதில் முழுவிச்சில் செயல்படுவதாக தெரிகிறது.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

வருமான வரித்துறை வெளியிட்ட இந்த 18 நிறுவன பெயர்கள் கொண்ட பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கூட சிக்கவில்லை. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I-T dept publishes names of big tax defaulters

The Income-Tax department today took to the strategy of ‘naming and shaming’ of some large tax defaulters as it published names of 18 entities who owe over Rs. 500 crore tax to the exchequer.
Story first published: Tuesday, March 31, 2015, 13:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X