300 புள்ளிகள் உயர்வுடன் மும்பை பங்குச் சந்தை.. நிஃப்டியின் நிலை என்ன?

மும்பை: 2015ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று காலையில் பங்குச்சந்தை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், மதிய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.

ஐரோப்பிய சந்தையின் நிலையான பொருளாதாரம் மற்றும் புதிய வர்த்தகம் துவங்குவதற்காக சாத்தியகூர்களும் தான் இன்றைய சந்தை உயர்விற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

300 புள்ளிகள் உயர்வு

300 புள்ளிகள் உயர்வு

புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சென்செக்ஸ் குறியீடு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும், 12.40 மணியளவில் தொடர்ந்து உயரத் துவங்கியது. இதன் எதிரொலியாக சந்தை வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 302.65 புள்ளிகள் வரை உயர்ந்து 28,260.14 புள்ளிகளை அடைந்தது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 95.25 புள்ளிகள் உயர்ந்து 8,586.25 புள்ளிகளை அடைந்தது.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஹெல்த்கேர், இன்பரா மற்றும் எஃப்எம்ஜிசி ஆகிய துறைகள் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்றது.

லாபமடைந்த நிறுவனங்கள்

லாபமடைந்த நிறுவனங்கள்

சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஐடிசி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்தது.

நஷ்டமடைந்த நிறுவனங்கள்

நஷ்டமடைந்த நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் உயர்வை சந்தித்தாலும் அரசு நிறுவனங்களான கெயில், பெல் மற்றும் மாருதி, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை தழுவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+