தங்கம் விலை கிராம் ரூ.9 உயர்வு

சென்னை: நாணய சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்ததால் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளான ஏமனில் உள்நாட்டுப் போர், சவுதி அரபியாவில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியால் நிலையற்ற விலை நிலைகள், சீன மற்றும் ஐரோப்பா நாடுகளின் மந்தமான பொருளாதார நிலை ஆகியகாரணங்களால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை எதிர்நோக்கி தங்கம் மற்றும் வெள்ளி மீதானமுதலீட்டை அதிகரிக்கத் துவங்கியுள்ளனர்.

இதன் காரணமாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

இந்திய நாணயச் சந்தையில் 24 கேரட் தங்கத்தின் விலை 9 ரூபாய் அதிகரித்து 2,691 ரூபாயாகவும், 22 கேரட் தங்கத்தின்விலை 8 ரூபாய் அதிகரித்து 2,516 ரூபாயாகவும் உள்ளது.

வெள்ளி

வெள்ளி

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்திய சந்தையில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 530 ரூபாய் அதிகரித்து 36,866 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.35 ரூபாயாக உள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

டிசிஎஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவுகள் மற்றும் வருடாந்திர முடிவுகள் சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.இதனால் அனைத்து டெக்னாலஜி நிறுவனங்களின் பங்குகளும் இன்று சரிவை சந்தித்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 75.62 புள்ளிகள் சரிந்து 28,590 புள்ளிகளையும், நிஃப்டி சந்தை 52.50 புள்ளிகள்சரிந்து 8,654.20 புள்ளிகளை எட்டியுள்ளது.

 

முக்கிய நகரங்களில் தங்கம் விலை

முக்கிய நகரங்களில் தங்கம் விலை

இந்தியாவில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்களைத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+