223 புள்ளிகள் சரிவும் மும்பை பங்குச் சந்தை!
மும்பை: நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ்-இன் 4வது காலாண்டு மற்றும் வருடந்திர முடிவுகள்முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டெக்னாலஜி நிறுவனங்கள் அனைத்தும்சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 223.94 புள்ளிகளை வரை சரிந்து 28,442.10புள்ளிகளை எட்டியது.

கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் தொடர் உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் குறியீடு 29,000 புள்ளிகளை மீண்டும் எட்டும்என்று எதிர்பார்த்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
நிஃப்டி குறியீடு 100.70 புள்ளிகள் சரிவுடன் 8,606 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துச் சந்தை முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், பெல், என்டிபிசி, ஒஎன்ஜிசி, டாடா பவர், ஐடிசி, சிப்லா ஆகிய நிறுவனங்கள்உயர்வைச் சந்தித்தது.


Click it and Unblock the Notifications