அட்சய திரிதியை:தங்கம் வாங்க நேரம் சரியில்லையே!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பண்டைய காலம் முதல் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்களுக்குத் தங்கம் மீதான மோகம் சிறிதளவும் குறையவில்லை.

 

தங்கம் வாங்க மிகவும் உகந்த நாளாகக் கருதப்படும் அட்சய திரிதி வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) என்பதால் நாட்டுமக்கள் அனைவரும் நாளை ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் அனைவருக்கும்ஒரு முக்கியச் செய்தி..

தற்போது உள்ள இந்திய மற்றும் சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தை அளிக்கும் எனச் சந்தை வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.

தங்கத்தின் தூய்மையை பரிசோதிப்பது எப்படி?

ஃப்ளிஸ் வாங்காதீங்க...

ஃப்ளிஸ் வாங்காதீங்க...

தங்கத்தை முதலீடாகப் பார்க்கும் அனைவருக்கும் அடுத்தச் சில மாதங்களில் தங்கத்தின் விலை அதிகளவில் குறையப் பல வாய்ப்புகளும், காரணங்களும் உள்ளதால் தங்கம் மீது முதலீடு செய்ய வேண்டாம்.

காரணங்கள்

காரணங்கள்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை அடுத்தச் சில மாதங்களில் உயர்த்துவது உறுதியாகிவிட்ட நிலையில் டாலர் மதிப்பு அதிகளவில் உயரும். மேலும் ஐரோப்பா பொருளாதார நிலையும் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை பங்குச்சந்தையில் செய்யும் நிலை உருவாகும்.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு குறையும்.

ஆபத்தான நிலை
 

ஆபத்தான நிலை

தற்போது சர்வதேச பங்குச்சந்தையின் நிலை மோசமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டைப் பாதுகாக்க தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்து வருகின்றனர்.

பங்குச்சந்தையின் நிலை மேம்படும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு 50 -60 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை ரூ.20,000க்கு குறைவான அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையின் நிலை

இந்திய சந்தையின் நிலை

திருமணம் மற்றும் விழா காலத்தை முன்னிட்டு குறுகிய காலத் தேவையின் காரணமாக இந்திய சந்தையில் அடுத்தச் சில மாதங்களுக்குத் தங்கம் விலையில் சில பல மாற்றங்களுடன் உயர்வைச் சந்திக்கும். இதனால் தங்கம் மீதான வர்த்தகத்தில் அதிகளவிலான பாதிப்பு இருக்காது.

10 சதவீத வளர்ச்சி

10 சதவீத வளர்ச்சி

மேலும் நாட்டின் முன்னணி முதலீட்டாளர் நிறுவனத்தின் கணிப்பின் படி அடுத்து 3 - 5 வருடங்களில் தங்கத்தின் விலை 10 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

இது கிட்டத்தட்ட வங்கி நிரந்த வைப்பு நிதிக்கு இணையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கத்து.

தங்கம்

தங்கம்

தங்கம் எப்போதும் சந்தை ஆபத்தான நிலையில் நம்முடைய முதலீட்டை பாதுகாக்கும் கருவியாகவே இருக்கும். ஆனால்இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டைத் தவிர்க்க வேண்டும் என்பது சந்தைவல்லுனர்களின் கருத்து.

இறக்குமதி வரி

இறக்குமதி வரி

நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை கருத்தில் கொண்டு மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி கட்டணத்தை அதிகரித்துள்ளது.

இதைப் படிக்க..

தங்க சேமிப்புத் திட்டம்

தங்க சேமிப்புத் திட்டம்

நகைக்கடை நிறுவனங்கள் அளிக்கும் தங்க சேமிப்புத் திட்டத்தில் மத்திய அரசு விதித்தத தடையின் காரணமாக இத்திட்டங்களின் மீதான முதலீடு குறைந்தது. அப்படி என்ன தடை விதித்தது அரசு..

தடை

தடை

நகை கடைகள் அளிக்கும் தங்க சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும் ஒரு வருட முதலீட்டுத் திட்டமாகவும், அதிகப்பட்சம் 12சதவீத லாபம் மட்டுமே அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனத் தடை விதித்தது.

தடைக்கு முன் 3 வருட திட்டத்தில் 19% லாபம், 2 வருட திட்டத்தில் 12% லாபம், ஒரு வருட திட்டத்தில் 8% லாபம் அளிக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கத்து.

மோசடியான திட்டங்களைத் தடுக்கவே இத்தகைய தடையை மத்திய அரசு விதித்தது.

இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

சென்னை மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் தங்க விலை நிலவரத்தை இங்க பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Don't buy gold on Akshaya Tritiya

Global economic condition are not favor to the gold investment. gold price may rise for short term period due to the festive season, after that gold price may face huge fall in Indian market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X