மும்பை: சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்த நிலை மற்றும் டாலர் மதிப்பு உயர்வால் மும்பை பங்குச்சந்தையின்சென்செக்ஸ் குறியீடு இன்று 555 புள்ளிகள் வரை சரிந்து 27,886 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதனால் சந்தை முதலீட்டாளர்கள் டிபென்ஸிவ் ஸ்டாக்ஸ் எனப்படும் அதிக ஈவுத்தொகை அளிக்கும் நிறுவனங்களிலும்,சிறந்த வர்த்தக வரலாற்றைக் கொண்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர்.
1,200 புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச்சந்தையின் அளித்துள்ள தகவலின் படி கடந்த 4 நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 1,200 புள்ளிகள் வரைசரிவை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே சரிவு பாதையில் சென்ற சென்செக்ஸ், மாலை நேரத்தில் அதிகளவிலானவீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு 555.89 புள்ளிகள் சரிந்து 27,886.21 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 157.90 புள்ளிகள் சரிந்து 8,448.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் லாபமடைந்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சந்தையின் முக்கியமான இரு நிறுவனங்கள் லாபமடைந்துள்ளது, இதில் சன் பார்மா மற்றும் ஐசிஐசிஐ வங்கி அடக்கம்.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஹிரோமோட்டோ கார்ப், சிப்லா, மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி,ஹெச்டிஎஃப்சி, ஒஎன்ஜிசி போன்ற சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications