மும்பை: தனியார் வங்கித்துறையில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.டி.எஃப்.சி வங்கி, 2014ஆம் நிதியாண்டில் மொத்த லாப அளவு 20.5 சதவீதம் அதிகரித்து 10,215 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இவ்வங்கியின் லாப அளவு 8,478.40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக எச்டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 20.6 சதவீதம் உயர்ந்து 2,806.90 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த வருடம் இதே காலாண்டில் இதன் அளவு 2,326.50 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி வருமானம்
2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மொத்த வட்டி வருவாய் 21.4 சதவீதம் உயர்ந்து 6,013.2 கோடி ரூபாயாக உள்ளது.
ஈவுத்தொகை
வருடாந்திர முடிவில் இந்நிறுவனப் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் ஈவுத்தொகை 6.85 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வருவாய்
இவ்வங்கியின் மொத்த வருவாய் 49,055 கோடி ரூபாயில் இருந்து ரூ.57,466 கோடியாக உயர்ந்துள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தில் வர்த்தம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications