மும்பை: நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ 2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவில் 10சதவீத உயர்வுடன் 2,922 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் ஐசிஐசிஐ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான எச்டிஎப்சி வங்கி, மொத்த லாப அளவில் 20 சதவீதம்உயர்ந்து 2,806 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் வராக் கடன் மதிப்பு 5,095 கோடி ரூபாயாகஉயர்ந்து பங்குச்சந்தையில் சரிவைத் தழுவியுள்ளது.
மொத்த லாபம்
சந்தையின் கணிப்புகளின் படி ஐசிஐசிஐ வங்கி, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 10.2 சதவீத உயர்வுடன்2,922 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.
வட்டி வருமானம்
இக்காலாண்டில் நிலையான வட்டி வகிதம் மற்றும் உயர்த்தப்பட்ட வட்டி வகிதத்தின் மூலம் இவ்வங்கியின் வட்டிவருமானம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 16.6 சதவீதம் உயர்ந்து 5,079 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பிற வருமானத்தில் 17.5 சதவீதம் உயர்ந்து 2,97509 கோடியில் இருந்கு 3,496.3 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
வராக் கடன்
இக்காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் வராக் கடன் மதிப்பு 88.4 சதவீதம் உயர்ந்து 1,345 கோடியாக உள்ளது. கடந்த வருடம்இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வராக் கடன் மதிப்பு 714 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர லாபம்
இந்நிறுவனத்தின் 2014ஆம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 14 சதவீதம் உயர்ந்து 11,175 கோடி ரூபாயாக உள்ளது.
பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையில் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் இன்று 1.85% சரிந்து 302.40 ரூபாய்க்கு வர்த்தகம்செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications