சென்னை: நாணயச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது வட்டி வகிதத்தை உயர்த்துவதற்காக இரண்டாவது முறையாக ஆலோசனை கூட்டத்தைச் செவ்வாய் மற்றும் புதன்கிழமை துவக்கியுள்ளது.
சந்தையின் கணிப்பின் படி பெடரல் ரிசர்வ் வட்டி வகிதத்தை உயர்த்த போதுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்பதால்கண்டிப்பாக இம்முறை வட்டி வகிதத்தை உயர்த்தாது எனக் கருத்து நிலவுகிறது.
இதன் காரணமாகவே நாணய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தையில் 24 கேரட் தங்கம், 1 கிராமிற்கு 27 ரூபாய் உயர்ந்து 2,731 ரூபாயாக உள்ளது , 22 கேரட்தங்கத்தின் விலை 1 கிராமிற்கு 25 ருபாய் அதிகரித்து 2,553 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை..
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 1 கிலோ பார்வெள்ளியின் விலை 890 ரூபாய் அதிகரித்து 37,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பங்குச்சந்தை
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 219 புள்ளிகள் உயர்ந்து 27,396.38 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. நிஃப்டிகுறியீடு 71.80 புள்ளிகள் வரை உயர்ந்து 8,285.60 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது.
டாலர் - ரூபாய்
செவ்வாய்க்கிழமை நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.15 ரூபாய் அளவு சரிவைசந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications