டெல்லி: சர்வதேச சந்தையில் தங்கம் விலைச் சரிவினாலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்ததாலும், இந்திய சந்தையில் தங்கத்தின் இறக்குமதி 19.5 சதவீதம் அளவு அதிகரித்ததுள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 34.32 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 28.7 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்க இறக்குமதி
2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் அதிகப்படியான தங்க இறக்குமதி செய்ததன் மூலம், நாட்டின் நடப்பு கணக்குப் பாற்றாக்குறை சுமார் 137 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம்
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் தங்க இறக்குமதி இரட்டிப்பானது. இதன் மூலம்தங்க இறக்குமதியின் மதிப்பு 4.98 பில்லியன் டாலராகவும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 11.79 பில்லியன் டாலராகவும்உயர்ந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா
உலகில் தங்க நகைகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதால், ஒவ்வொரு வருடமும்மக்கள் தொகை அதிகரிப்பது போல் தங்கத்தின் இறக்குமதி அளவு அதிகரித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி
கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்ததால், நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மேம்பட்டுக்காணப்பட்டது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான கட்டணத்தில் சில தளர்வுகளைஅறிவித்தது.
இந்த வாய்ப்புப் பயன்படுத்தித் தங்க வர்த்தகர்கள் அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்தனர்.
80:20 திட்டம்
தங்க இறக்குமதியை அதிகளவில் குறைத்தது, ரிசர்வ் வங்கி அறிவித்த 80:20 திட்டம் தான்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மேம்பட்டுக் காணப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி இத்திட்டத்தை விலக்கிக் கொண்டது. இதன் காரணமாகவே நாட்டில் தங்க இறக்குமதி அதிகரித்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications