மும்பை: மே மாத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 479.28 புள்ளிகள் உயர்வில் முடிந்தது.
ஏப்ரல் மாதம் முழுவதும் பங்குச்சந்தையில் பல ஏற்ற இறக்கங்கள் சந்தித்த நிலையில், சென்செக்ஸ் இன்று 479 புள்ளிகள் உயர்ந்து 27,490.59 புள்ளிகளை எட்டியது. இன்றைய உயர்விற்கு ஐரோப்பா சந்தையில் ஏற்பட்ட எழுச்சி முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஓஎன்ஜிசி
திங்கட்கிழமை வர்த்தகத்தில், துவக்கம் முதலே உயர்வடைந்த சென்செக்ஸ் குறியீடு, தொடர்ச்சியான உயர்வைச் சந்தித்தது 27,490.59 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி 5 சதவீதம் உயர்ந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 150.45 புள்ளிகள் உயர்ந்து 8,331.95 புள்ளிகளை அடைந்தது.
உலகச் சந்தைகள்
சர்வதேச சந்தையில் ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், மற்றும் பிரட்டன் ஆகிய நாடுகளில் சந்தை உயர்வுடன் முடிவடைந்துள்ளது. இதில் குறிப்பாக ஜெர்மனி சந்தை 1.36 சதவீதம் உயர்வடைந்துள்ளது.
வங்கித்துறை பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் வங்கித் துறை பங்குகள் அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்து. குறிப்பாக நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி 0.63 சதவீத சரிவை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து கோட்டாக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் போன்ற வங்கிகள் குறைந்த அளவிலான உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது.
சரிவைத் தழுவிய நிறுவனங்கள்
எல் அண்ட் டி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்களும் இன்றைய வர்த்தகத்தில் சரிவைதழுவியுள்ளது.
அரசு நிறுவனங்கள்
மே மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று அரசுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி, பெல், ஹின்டல்கோ, கெயில்,கோல் இந்தியா போன்ற நிறுவனங்கள் உயர்வை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications