மும்பை: 2015ஆம் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் பங்குச்சந்தை அதிகளவிலான சரிவைக் கண்டாலும், மே மாதத்தில்முதல் வர்த்தக நாளிலேயே சிறப்பான வர்த்தகத்தைச் சந்தித்தது மும்பை பங்குச்சந்தை.
சந்தை சிறப்பாகச் செயல்படும் இத்திருணத்தில் முதலீட்டாளர்கள் தங்களது இருப்பு பங்குகளை, லாப நோக்கத்தோடு அதிகளவில் விற்பனை செய்துள்ளதால் சென்செக்ஸ் குறியீடு 50 புள்ளிகள் சரிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ் குறியீடு 11 மணியளவில் உயர்வைச்சந்தித்தாலும், வர்த்தக முடிவில் 50 புள்ளிகள் சரிவு முடிவடைந்தது.
சென்செக்ஸ்
இந்நிலையில் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 50.45 புள்ளிகள் சரிந்து 27,440.14 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறீயிட்டை போலவே நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது. இதன் படி இன்றைய வர்த்தகத்தில் 11 புள்ளிகள்சரிந்து 8,320.70 புள்ளிகளை அடைந்தது.
அரசு நிறுவனங்கள்
திங்கட்கிழமை சந்தையைப் போலவே, இன்றும் அரசு நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் உயர்வைக் கண்டது. இதில்ஓஎன்ஜிசி, ஹின்டால்கோ, கெயில் ஆகியவை அடக்கம்.
ஐடி நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வைச் சந்தித்ததுள்ளதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications