மும்பை: இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை அதிகளவில் குறைத்து, நாணயச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக நாணய சந்தையில் 24 கேரட் தங்கம் விலை கிராமிற்கு 21 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
புதன்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 21 ரூபாய் அதிகரித்து 2,735 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
அதேபோல் 22 கேரட் ஒரு கிாரம் தங்கத்தின் விலை 19 ரூபாய் அதிகரித்து 2,557 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோபார் வெள்ளியின் விலை 37495.00 ரூபாயில் இருந்து 515 ரூபாய் உயர்ந்து 38010.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் நிலைபெற்றுள்ளது. இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 63.57 ரூபாயாக உள்ளது.
பெடரல் ரிசர்வ்
அடுத்தச் சில நாட்களில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், அரசு பத்திரங்களின் மீதான வட்டி வகித்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதால், சர்வதசே சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,200 டாலருக்கு குறைவான விலையில் நிலைபெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications