அன்னிய முதலீட்டாளர்களின் திடீர் முதலீட்டு குறைப்பால் சென்செக்ஸ் 745 புள்ளிகள் சரிவு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் செய்த முதலீட்டுக்கான வரியை செலுத்தவருமான வரித்துறை நிர்பந்தம் செய்ததால், முதலீட்டாளர்கள் தங்களது இருப்பைக் குறைத்து வருகின்றனர்.

 

இதன் காரணமாகவே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்திலேயே 745 புள்ளிகள் வரை குறைந்துள்ளது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை அதிகளவில் குறைத்து வருவதால் புதன்கிழமைவர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 745 புள்ளிகள் வரை சரிந்து 26,695.64 புள்ளிகளை எட்டியுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 232.55 புள்ளிகள் சரிந்து 8,092.25 புள்ளிகளை எட்டியுள்ளது.

மேலும் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரியவும் வாயப்புள்ளது.

வருமான வரித்துறை நோட்டிஸ்

வருமான வரித்துறை நோட்டிஸ்

அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களுக்கு, இந்திய நிறுவனங்கள் அளித்த போனஸ் பங்குகள் மற்றும் பங்குபரிமாற்றத்திற்கான மினிமம் ஆல்டர்நேடிவ் டாக்ஸ் (MAT) செலுத்த வருமான வரித்துறை, முதலீட்டாளர்களுக்கு நோட்டிஸ் அளித்தது.

ரூ. 15,000 கோடி அளவு
 

ரூ. 15,000 கோடி அளவு

இந்த வரித் தொகையின் அளவு 7,000 கோடி ரூபாய் முதல் 15,000 கோடி ருபாய் அளவில் இருக்கும் என வருமான வரித்துறைஉயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வழக்கு

வழக்கு

வருமான வரித்துறையின் அறிக்கையை எதிர்த்து சில முதலீட்டாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தனர்.

ஆனால் வழக்கு வருமான வரித்துறைக்குச் சாதகமாக உள்ளது. இதனால் வழக்கு முடிவு பெறும் முன்னரேமுதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.

இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தங்களை

இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தங்களை

முதலீட்டின் மீது விதிக்கப்பட வேண்டிய 20 சதவீத சலுகையை வருமான வரித் துறை அளிக்கவில்லை எனமுதலீட்டாளர்கள் பதிவு செய்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய முதலீட்டாளர்கள் தங்களது முதலீகளுக்கு 20 சதவீதம் வரிச் சலுகை பெற இரட்டை வரித் தவிர்ப்பு ஒப்பந்தம்செய்யப்பட்ட நாடுகளில் முதலீடு செய்து, அதை இந்திய சந்தையில் முதலீடு செய்கின்றனர்.

1000 முதலீட்டாளர்கள்

1000 முதலீட்டாளர்கள்

இந்த முறையைப் பயன்படுத்தி 1,000 அன்னிய முதலீட்டாளர்கள் மினிமம் ஆல்டர்நேடிவ் டாக்ஸ் (MAT) விதிப்பில் இருந்துதப்பித்து வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மொத்த முதலீடு

மொத்த முதலீடு

அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மூலம் இந்திய சந்தையில் 6 - 7 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Crashes 500 Points As FIIs Press Sales

The Sensex came crashing down by a huge 500 points as Foreign Portfolio Investors (FPI) pressed sales in banking stocks, despite a favourable outcome for one FPI in the payment of Minimum Alternate Tax (MAT). 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X