மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது பங்கு இருப்பை அதிகளவில் குறைத்ததால், இன்றையவர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 745 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சரிவை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு, வர்த்தகம்முடியும் வரை தொடர் சரிவைச் சந்தித்தது.

இதன் விளைவாகச் சென்செக்ஸ் குறியீடு 745 புள்ளிகள் வரை சரிந்து 26,695.64 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடதக்கது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டியும் 232.55 புள்ளிகள் சரிந்து 8,092.25 புள்ளிகளை எட்டியது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.குறிப்பாக வங்கித்துறை, ஆட்டோமொபைல் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டும் 0.57 சதவீத உயர்வுடன் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications