மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது இருப்புகளை அதிகளவில் குறைந்தால் புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 745 புள்ளிகள் வரை சரிந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் மும்பை பங்குச் சந்தை சரிவை தழுவியுள்ளது. இன்று காலை வர்த்தகம் சரிவிலேயே துவங்கினாலும், 10 மணியளவில் 120 புள்ளிகள் வரை உயர்ந்து மீண்டும் சரிவு பாதையை நோக்கிச் சென்றது.
இதன் விளைவாக மதியம் 12.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 175 புள்ளிகள் சரிந்தது.
சென்செக்ஸ்
தற்போது சென்செக்ஸ் குறியீடு 76.02 புள்ளிகள் சரிவுடன் 26,641 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சரிவை தழுவியுள்ளது குறிப்பிடதக்கது.
நிஃப்டி
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி, 27 புள்ளிகள் சரிவுடன் 8,069.70 உள்ளது.
வங்கித்துறை
இன்றைய வர்த்தகத்தில் வங்கிப்பங்குகள் அதிகளவில் பாதித்துள்ளது. குறிப்பாக ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
ஐடி நிறுவன பங்குகள்
ஐடி நிறுவன பங்குகள் புதன்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்தாலும், வியாழக்கிழமை வர்த்தகத்தில் உயர்வைடைந்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications