மும்பை: வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 118 புள்ளிகள் சரிந்து 26,599.11 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 745 புள்ளிகள் குறைந்து மிகப்பெரிய சரிவை சந்திக்கும் நிலை உருவானது. இதன் எதிரொலியாகவே இன்றும் சந்தை சரிவிலேயே உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 40 புள்ளிகள் சரிவுடன் 8,057.30 புள்ளகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவன பங்குகள் சிறப்பான வர்த்தகம் மற்றும் முதலீட்டை பெற்று 1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை கண்டுள்ளது.
இதில் டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டிசிஎஸ் 3.27 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
மேலும் வங்கி பங்குகள் கடுமையான வர்த்தக சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications